2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கொத்மலை பிரதேச விவசாயிகளுக்குத் தீர்வு

Editorial   / 2020 ஜனவரி 28 , பி.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நீலமேகம் பிரசாந்த்

கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட வெதமுல்ல, லில்லிஸ்வேன், கேமிலிதன், புரட்டொப் ஆகிய தோட்டங்களில் பிரச்சினைகளை எதிர்நோக்கி வந்த விவசாயிகளுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.  

குறித்த பகுதியிலுள்ள தனியார் தோட்டங்கள், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ​வேறொரு தனியார் நிறுவனத்தால் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது. இந்தத் தனியார் ​நிறுவனத்துக்குக் கீழ், பல வருடங்களாக விவசாயத்தில் ஈடுபட்டு வந்தவர்களுக்கு, புதிய நிர்வாக மாற்றத்தின் பின்னர், விவசாயம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டது.  

இதனால், கடந்த பல மாதங்களாக, பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வந்த விவசாயிகள், இது குறித்து கொத்மலை பிரதேச சபையிடம் முறையிட்டுள்ளனர். இந்நிலையிலேயே, கொத்மலை பிரதேச சபை உறுப்பினர் இலங்கோவால், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு இது குறித்து தெரியப்படுத்தப்பட்டுள்ளது.  

இந்நிலையில், குறித்த தனியார் தோட்ட நிர்வாகத்துடன் கலந்துரையாடிய அமைச்சர், பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர்ந்தும் தங்களது இடங்களில் விவசாயங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகத் ​தெரிவிக்கப்படுகின்றது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .