2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கொம்போஸ்ட் நிலையத்தை நவீனமயப்படுத்த ரூ. 60 இலட்சம் ஒதுக்கீடு

மொஹொமட் ஆஸிக்   / 2019 பெப்ரவரி 07 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்குறணைப் பிரதே​ச சபையால் நிர்வகிக்கப்பட்டுவரும் அலவத்துகொடை இயால்காமம் பிரதேசத்திலுள்ள கொம்போஸ்ட் உரம் தயாரிக்கும் நிலையத்தை நவீனமயப்படுத்துவதற்கு, 60 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எம்.இஸ்திஹார் தெரிவித்தார், 

அக்குறணைப் பிரதேச சபையின் மாதாந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். மேற்படி கொம்போஸ் நிலையத்தால், தாம் சுகாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்து, கொம்போஸ் நிலையத்தை அண்மித்து அமைந்துள்ள பிரதேச மக்கள், அண்மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.   

இந்நிலையில், மேற்படி மக்களுக்கு எவ்வித் பாதிப்புகளும் ஏற்படாத வகையில், கொம்போஸ் நிலையத்தைப் புனரமைத்துத் தருவதாக, தவிசாளர் ஐ.எம்.இஸ்திஹார் வாக்குறுதி வழங்கியிருந்தார்.  

இதற்கமைவாக மேற்படி நிலையத்தை நவீனமயப்படுத்துவதற்கு 60 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதெனவும் இந்நிதியைக் கொண்டு, கொம்போஸ்ட் நிலையத்தைச் சுற்றியுள்ள மதிலை மேலும் உயர்த்துவதற்கும் புதிதாக மதில் தேவைப்படும் பிரதேசங்களுக்கு, மதில் கட்டுவதற்கும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  

இதேவேளை, அவ்விடத்தில் பிரதேச சபையின் வாகனத் தரிப்பிடத்தை நிறுவுவதற்கும் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X