2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கோட்டாவை சந்தித்த தொண்டா இந்தியாவுக்குப் பறந்தார்

Editorial   / 2019 மார்ச் 25 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமானுக்கும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளதாக அறிய முடிகிறது. 

மருத்துவ சிகிச்சையொன்றுக்காக ஆறுமுகன் தொண்டமான் எம்.பி, அண்மையில் இந்தியாவுக்குச் சென்றிருந்தார். இந்நிலையில், அவர் இந்தியாவுக்கு செல்வதற்கு முன்பு, இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

இந்தச் சந்திப்பின்போது, ஜனாதிபதி வேட்பாளராகப் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ களமிறக்கப்பட்டால் அதற்கு இ.தொ.கா ஆதரவளிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவை களமிறக்க திட்டமிட்டிருப்பதாக அண்மையில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .