2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

கோழிப் பண்ணையால் சுகாதாரச் சீர்கேடு

Editorial   / 2018 ஜூன் 13 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரவிந்திர விராஜ் அபயசிறி

மாத்தளை பிரதேச சபைக்குட்பட்ட புவக்பிட்டிய - ரஜம்மான பிரதேசத்தில், காணி மறுசீரமைப்புத் திணைக்களத்துக்குச் சொந்தமான இடத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் மிக விசாலமான கோழிப் பண்ணையால், அப்பகுதியில் பாரிய சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதென, மாத்தளை பிரதேச சபைத் தவிசாளர் கபில பண்டார ஹேன்தெனிய தெரிவித்துள்ளார்.

மாத்தளை பிரதேச சபையின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், இன்று (13) நடைபெற்றது. இதன்போதே அவர், மேற்படி விடயம் குறித்து, சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய தவிசாளர், மேற்படி பிரதேசத்தின் சுமார் 20 - 50 ஏக்கர் நிலப்பரப்பில், பாரிய கோழிப் பண்ணையொன்று நடத்தப்பட்டு வருவதாகவும் இந்தக் கோழிப் பண்ணையில், தினமொன்றுக்கு 4,000 கோழிகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு வெட்டப்படும் கோழிகளின் கழிவுகள், பண்ணைக்கு அருகிலுள்ள ஆற்றில் வீசப்படுவதால், அப்பகுதியில் பாரிய சுகாதாரச் சீர்கேடு நிலவுவதாகவும் அவர் எடுத்துரைத்தார்.

அத்துடன், வறிய மக்களுக்கான காணிகளைப் பெற்றுக்கொடுப்பதில் பாரிய இடர்களுள்ள நிலையில், காணி மறுசீரமைப்புத் திணைக்களத்துக்குச் சொந்தமான காணியில், இந்தக் கோழிப் பண்ணை நடத்தப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டிய தவிசாளர், உள்ளூராட்சிமன்றங்கள் அறியத்தக்க வகையில், இந்தக் கோழிப் பண்ணை நடத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட அவர், இது தொடர்பில் அதிகாரிகள் கண்டறிய வேண்டுமென்றும், அவர் வலியுறுத்தினார்.

எவ்வாறாயினும், தவிசாளரின் குற்றச்சாட்டை மறுத்த காணி மறுசீரமைப்புத் திணைக்களத்தின் அதிகாரிகள், மேற்படி கோழிப் பண்ணையானது, தமது நிலத்தில் அல்லாது, தனியார் ஒருவருக்குச் சொந்தமான நிலத்திலேயே நடத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .