2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சட்டிக் குளவியால் ஆபத்து

எஸ்.சதிஸ்   / 2020 ஜூன் 10 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா - சாமிமலை டிசைட் கிலனுகி தோட்டத்திலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தின் கூ​ரையில், பாரிய சட்டிக் குளவிக் கூடு காணப்படுவதாகவும் இதனால் சிறுவர்கள், பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், அந்தக் கூட்டை அகற்றித் தருமாறும், பிரதேச மக்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சிறுவர் பராமரிப்பு நிலையத்தில், 20க்கும் மேற்பட்ட சிறுவர்கள், குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் இந்தக் கூடு, நாளுக்கு நாள் பெரிதாகி வருவதால், சிறுவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.  

இது தொடர்பாக, மஸ்கெலியா பொலிஸார், தோட்ட நிர்வாகம், வனவிலங்கு அதிகாரிகள் ஆகிய அனைவருக்கும் அறிவித்துள்ள  போதிலும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.    

எ​னவே, குழந்தைகள், சிறுவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .