2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

சப்ரகமுவ மாகாண இளைஞர், யுவதிகளுக்கு தொழில் முனைவுத்துறைத் திட்டம்

சிவாணி ஸ்ரீ   / 2019 ஜூன் 07 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் வேலையற்ற இளைஞர், யுவதிகளை தொழில் முனைவுத்துறைக்கு உட்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று, நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாக, சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்க தெரிவித்தார்.

“அழகிய சப்ரகமுவ” வேலைத்திட்டத்தின் கீழ், சப்ரகமுவ மாகாண இளைஞர் விவகார அமைச்சினூடாக, இரத்தினபுரி மாவட்டத்தில், இளைஞர், யுவதிகளை தொழில் முனைவுத்துறைக்கு உட்படுத்துவது குறித்துத் தௌவுபடுத்தும் நிகழ்வு, இரத்தினபுரிய புதிய நகரில் அமைந்துள்ள சமுர்த்தி மண்டபத்தில், சமீபத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில், வேலையற்ற இளைஞர், யுவதிகளின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டே, இவர்களை தொழில் முனைவுத்துறைக்கு உட்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த வேலைத்திட்டத்தின் மூலம், இளைஞர், யுவதிகளுக்கு, பல்வேறு துறைகள் சார்ந்த தொழில்கள் குறித்துத் தெளிவுபடுத்தப்படும் என்றும் இளைஞர், யுவதிகள் எதிர்நோக்கிவரும் பல்வேறு பிரச்சிணைகளுக்கு தீர்வைப் பெற்று கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X