2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சப்ரகமுவ மாகாணத்தில் 1,522,043 பேர் வாக்களிக்கத் தகுதி

Editorial   / 2018 நவம்பர் 12 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஜித்லால் சாந்த உதய

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், சப்ரகமுவ மாகாணத்தின் கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கான 20 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கு, 15 இலட்சத்து 22 ஆயிரத்து 43 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனரென்று, தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அந்த வகையில், இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து 11 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு, அந்த மாவட்டத்தில், 8 இலட்சது 52 ஆயிரத்து 473 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்று, தேர்தல்கள் திணைக்களத்தின் இரத்தினபுரி மாவட்ட ஆணையாளர் சுரங்க அம்பகஹாதென்ன தெரிவித்தார்.

இரத்தினபுரி மாவட்டமானது, எஹலியகொட, இரத்தினபுரி, பெல்மடுளை, பலாங்கொடை, இறக்குவானை, நிவித்திகல, கலவான மற்றும் கொலொன்ன ஆகிய 8 தேர்தல் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

மேலும், கேகாலை மாவட்டத்திலிருந்து, 9 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக, 6 இலட்சத்து 69 ஆயிரத்து 570 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனரென்றும் அவர் தெரிவித்தார்.

கேகாலை மாவட்டமானது, தெடிகம, கலிகமுவ, கேகாலை, இறம்புக்கனை, மாவனெல்ல, அரநாயக்க, யட்டிந்தொட்டை, ருவான்வெல்ல மற்றும் தெரணியகலை ஆகிய ஒன்பது தேர்தல் தொகுதிகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X