2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘சமயப் பாடங்களை கற்பதில் நெருக்கடி’

Editorial   / 2019 மார்ச் 05 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உமாமகேஸ்வரி 

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள சிங்கள மொழி மூலமான பாடசாலைகளில் கல்வி கற்கும் தமிழ் (இந்து), முஸ்லிம் மாணவர்களுக்கு, தமக்குரிய சமயப் பாடங்கள் கற்பிக்கப்படுவதில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.  

இம்மாணவர்களுக்கு, பௌத்த சமயங்கள் போதிக்கப்பட்டுவரும் நிலையில், அதற்கான கணிப்பீட்டுப் புள்ளிக​ளே வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

​குறித்த மாணவர்கள், க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளிலும் பௌத்த சமய பரீட்சைக்கே தோற்றுவதாகவும் இரத்தினபுரி ​- கலவான பகுதியிலேயே, பெரும் எண்ணிக்கையான மாணவர்கள், இந்நிலைக்கு முகம்கொடுப்பதாகவும் அறிய முடிகிறது.  

இவ்வாறு கல்வி கற்கும் மாணவர்களில், இந்து சமயத்தைச் ​சேர்ந்த மாணவர்கள் ​கோவில்களுக்குச் செல்வதைப் புறக்கணிக்கும் நிலைமை காணப்படுவதாகவும் சமயப் பாடத்தை கற்பிப்பதற்கான ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாலேயே, இந்த நிலை ஏற்பட்டுள்ளதென பெற்றோர்கள் கூறுகின்றனர்.  

அதேபோல், இரத்தினபுரியிலுள்ள முஸ்லிம் மாணவர்கள் சிலரும் இந்நிலைக்கு முகம்கொடுத்துள்ளனர் என, இரத்தினபுரி மத்தியஸ்த சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். பாருக் தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .