2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘சமுர்த்தி, மானியங்களை பெற்றுக்கொடுப்பதற்கும் கூட்டணி அழுத்தம் கொடுக்கும்’

டி. ஷங்கீதன்   / 2019 பெப்ரவரி 18 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பள உயர்வு விடயத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணி, அழுத்தம் கொடுத்ததைப் போன்று, மானியங்கள், சமுர்த்தி கொடுப்பனவுகளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்குப் பெற்றுக்கொடுப்பதற்கும், அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமெனத் தெரிவித்த விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக முதல் முறையாக, வரவு-செலவுத்  திட்டத்தில், ஒரு தொகையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, இம்முறை பாதீட்டினூடாக வழங்கப்படவுள்ள ஐம்பது ரூபாய் சம்பள அதிகரிப்புத் தொடர்பில் விளக்கமளிக்கும் கூட்டம், ஹட்டன் டி.கே.டபிள்யு மண்டபத்தில், நேற்று (17) நடைபெற்றது.  

இந்தக் கூட்டத்தில், மலையக புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

அங்கு தொடர்ந்துரைத்த அவர் மேலும் கூறுகையில்,  தமிழ் முற்போக்குக் கூட்டணி, அரசாங்கத்துக்குக் கொடுத்த அழுத்தமே, வரவு- செலவுத்திட்டத்தில் ஒரு தொகையை வழங்குவதற்கு காரணமென்றும் சுட்டிக்காட்டினார்.  

அதேபோன்று நாட்டின் ஏனையப் பகுதி மக்களுக்கு வழங்கப்படுகின்ற மானியங்கள், சமுர்த்தி கொடுப்பனவுகளை, பெருந்தோட்ட மக்களும் பெற்றுக்கொள்வதற்கு, இது ஓர் ஆரம்பமாக அமையுமென்றும் அவர் தெரிவித்தார்.  

இதுவரை காலமும், கூட்டுஒப்பந்தம் கைச்சாத்திட்டதன் பின்பு, அது தொடர்பாக எந்தவிதமான எதிர்ப்புகளும் அல்லது அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தையோ நடைபெறுவது இல்லை. எனினும், இம்முறை, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து, மேலதிகமாக 50 ரூபாயை தமிழ் முற்போக்கு கூட்டணி பெற்றுக் கொடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.  

எதிர்காலத்தில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள், தாங்கள் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடியாது என்பது, இம்முறை கூட்டு ஒப்பந்தத்தின் மூலமாக கொடுக்கப்பட்ட அழுத்தத்தில் தெளிவாகியுள்ளதென்றும், எனவே எதிர்காலத்திலும் அந்த அழுத்தங்களைக் கொடுப்பதற்கு, தமிழ் முற்போக்கு கூட்டணி என்றும் பின்னிற்காது என்றும் அவர் தெரிவித்தார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .