2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘சர்வதேச தேயிலைத் தினம் இருப்பதாக தமக்கு தெரியவில்லை’

Editorial   / 2017 டிசெம்பர் 16 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன், கு.புஸ்பராஜ்

சர்வதேச தேயிலைத் தின நிகழ்வுகள் நேற்று(15) பல மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டன.

தேயிலை உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு 150 வருடங்கள் கடந்த நிலையில், அதில் வேலைச்செய்யும் ஊழியர்கள் தனது பொருளாதாரத்தில் அபிவிருத்தி காணாதவர்களாக உள்ளனர் என பலரின் குற்றச்சாட்டாக உள்ளது.

இந்தவகையில், மலையகத்தில் வாழும் பெரும்பாலானவர்கள் தேயிலை தொழிலையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தோட்ட நிர்வாகத்தின் கீழ் தொழில் செய்து வருவதோடு, எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் பல்வேறுப்பட்ட விடயங்களை எதிர்பார்த்து வாழ்ந்து வருவதாக தோட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், டிசெம்பர் 15ஆம் திகதியை சர்வதேச தேயிலைத் தினமாக கொண்டாடுகின்றப் போதிலும், இப்படியான ஒரு தினம் இருப்பதாக தமக்கு தெரியவில்லை என கவலைத் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் வேறு தொழில்களை மேற்கொள்பவர்கள் பாதுகாப்புடன் தொழில் செய்கின்ற போதிலும், தாம் பாதுகாப்பற்ற முறையில் ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தலோடு, குளவி கொட்டு, சிறுத்தை தாக்குதல், மரம் முறிந்து விழுதல், மின்னல் தாக்குதல், விஷ பாம்பு கடி என, பல்வேறுப்பட்ட துன்பங்களோடு தொழிலை மேற்கொண்டு வருகின்றோம்.

கஷ்டப்பட்டு உழைத்தாலும், அதற்கான ஊதியத்தை பெற்றுக்கொள்வதற்கு பல போராட்டங்களை மேற்கொண்டு, கறுப்பு கொடிகளை பிடித்த போதிலும் தமக்கு எவ்வித பயனும் இல்லை. மேலும் எங்களை மலையக அரசியல் தலைமைகளும், அரசாங்கமும் திரும்பி பார்ப்பதில்லை என, தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை பசி, பட்டினியோடு வேலை செய்தும், உறங்குவதற்கு கூட முறையான வீடுகள் வசதி அற்ற நிலையில் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் அவர்களின் தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத அளவிற்கு பின்னடைவில் நாங்கள் காணப்படுகின்றோம்

சர்வதேச தேயிலைத் தினத்திலாவது, தமக்கு விடுமுறைகளை வழங்கி பூஜைகள் அல்லது பிராத்தனைகளை மேற்கொள்வதற்கு தகுதியற்றவர்களாக இருப்பதோடு, குறித்த செயற்றிட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசியல்வாதிகள் கூட அக்கறை காட்டவில்லை எனவும் மக்கள் தங்களது கருத்தை  வெளிப்படுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .