2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சிங்கராஜ வனத்தில் 143 ஏக்கர் காடழிப்பு சுற்றாடலியலாளர்கள் கண்டனம்

Gavitha   / 2021 மார்ச் 11 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஏ.ஏ.எம்.பாயிஸ்

சிங்கராஜ வனத்தில், 143 ஏக்கர் பகுதி காடுகளில், தேயிலைச் செய்கை செய்யப்படுவதாக, சுற்றாடலியலாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இவ்வனாந்திரத்தின் தெல்கொட என்ற பிரதேசத்திலேயே, இந்தக் காடழிப்பு நிகழ்வதாகவும் இதுவரை 10 ஏக்கருக்கும் அதிகமான காடுகள் அழிக்கப்பட்டு, தேயிலைக் கன்றுகள் நடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வனாந்தரத்தில், 143 ஏக்கர் நிலத்துக்கு போலிக்காணி உறுதியைத் தயாரித்து, இம்முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் இதனால், இப்பிரதேசத்திலுள்ள பிராணிகள், பறவைகள் உள்ளிட்ட அரியவகை மூலிகை மரங்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .