2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சிங்கராஜா வனத்தினுள் கொங்கிரீட் வீதி அமைப்புக்கு கடும் எதிர்ப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 27 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம்.பாயிஸ்

உலக மரபுரிமையாகக் கருதப்படும் சிங்கராஜ இயற்கை வனத்தினுள், கொங்கிரீட் வீதி அமைக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பு  தெரிவிக்கப்பட்டுள்ளது.  சிங்கரா  வனத்தின் கலவான குடவ நுழைவாயில் பகுதிகளிலேயே, இந்த வீதி அமைப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

இதற்கான வேலைத்திட்டங்களை, சிங்கராஜ நிர்வாக அமைப்பு மேற்கொண்டுள்ளதாக பல்வேறு சுற்றாடல் பாதுகாப்பு அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, போக்குவரத்து வீதி அமைப்பதற்காகவும் அவர்களுக்கான ஏனைய வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் இந்த வீதி அமைக்கப்படுவதாக, சிங்கராஜா வன நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனினும் இம்முயற்சி சிங்கராஜ வனத்தின் இயற்கை வனப்பை அழித்து விடும் என்பதாலும் இதற்கு முன்பு இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது, தமது எதிர்ப்பின் காரணமாக இந்த முயற்சி கைவிடப்பட்டதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இனியும் வேறு காரணங்களைக் காட்டி மீண்டும் சிங்க ராஜ வனத்தின் நடுவே இவ்வீதி அமைப்பதற்கு வனபரிபாலன திணைக்களம், சிங்கராஜ வன நிர்வாகம் ஆகியன முயற்சித்து வருவதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

வனத்தின் நடுவே இவ்விதி அமைக்கப்பட்டால், சிங்கராஜ வனத்தின் இயற்கை வனப்பு குறைந்து சுற்றாடல் மாசடைந்து சமூகவிரோத செயல்கள் ஏற்படவும் போதைப்பொருள் பாவனை உட்பட ஏனைய குற்றச்செயல்கள் இடம்பெற காரணமாக அமையும் எனவும்   சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே இந்நடவடிக்கையை உடனடியாக கைவிடாவிட்டால், இம்முயற்சிக்கு எதிராக பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர்கள்  எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .