2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிதறுதேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 ஜூன் 25 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதீஸ்

இலங்கை அஞ்சல் சேவைத் திணைக்கள ஊழியர்களின் போராட்டத்துக்கு மேலும்  வலுச் சேர்க்கும் வகையில், ஹட்டன் பிரதேசத்துக்கு உட்பட்ட அஞ்சல் திணைக்கள ஊழியர்கள், கறுப்புப் பட்டியணிந்தும் சிதறு தேங்காய் உடைத்தும், ஹட்டனில் இன்று (25) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹட்டன், பொகவந்தலாவை, மஸ்கெலியா, டிக்கோயா, வட்டவளை, கினிகத்தேனை, நோர்வூட், தலவாக்கலை, நுவரெலியா, டயகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட அஞ்சல் திணைக்கள ஊழியர்கள், இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள், ஹட்டன் பிரதான தபால் நிலையத்திலிருந்து ஹட்டன் பழைய தபால் நிலையம் வரை பேரணியாகச் சென்றதுடன், பேரணியின் முடிவில், தங்களது அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, ஹட்டன் பிரதான தபால் நிலையத்துக்கு முன்பாக சிதறுதேங்காய் உடைத்தனர்.

இலங்கை அஞ்சல் திணைக்கள ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த 15 தினங்களாகப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதனால், நாடளாவிய ரீதியில், தபால் சேவை  ஸ்தம்பிதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X