2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சிறுத்தையால் நூரளையில் அச்சம்

Kogilavani   / 2018 ஜூன் 26 , பி.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சந்ரு, எஸ்.கணேசன்

நுவரெலியா - ராகலை வீதியின் ஹாவா-எலிய பகுதியிலுள்ள கெல்வே ஃபொரஸ்ட் பிரதேசத்தில், இரவு வேளைகளில் சிறுத்தையின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், தாம் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக, பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.  

இதேவேளை, சிறுத்தையால் இழுத்துச் செல்லப்பட்ட மட்டக் குதிரையின் (போனி) உடற்பாகங்கள், கெல்வெஸ்லெண்ட் பிரதேசத்திலிருந்து, இன்று (26) மீட்கப்பட்டனவென, பொலிஸார் தெரிவித்தனர்.  

கெல்வெஸ்லெண்ட் காட்டுக்கு, சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த மட்டக் குதிரையையே, நேற்று  நள்ளிரவு, சிறுத்தை இழுத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.   

அண்மைக் காலமாக, நுவரெலியா நகரில் இரவு வேளைகளில், சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கும் பிரதேச மக்கள், இதனால், இரவில் பயணிப்பதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.  

மேற்படி பகுதியிலுள்ள குடியிருப்பு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சீசீடிவியில் கூட, சிறுத்தையின் நடமாட்டம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.   

மேலும், இரவு வேளைகளில் வரும் சிறுத்தைகள், வளர்ப்புப் பிராணிகளை இழுத்துச் செல்வதாகவும், மக்கள் தெரிவிக்கின்றனர்.  

சிறுத்தையின் பாதத் தடங்களை அவதானித்த நுவரெலியா வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், சிறுத்தையைப் பிடிப்பதற்காக, இரும்பிலான கூடொன்றை, குறித்த பகுதியில் வைத்துள்ள போதிலும், சிறுத்தை இதுவரை பிடிப்படவில்லை என்றுத் தெரிவிக்கப்படுகிறது.  

பிதுருதாலகால மலை, ஹக்கல அல்லது சீதாஎலிய ஆகிய காட்டுப் பகுதிகளிலிருந்தே, இப்பகுதியை நோக்கி சிறுத்தை வந்துசெல்வதாக, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், சந்தேகம் தெரிவிக்கின்றனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .