2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’சிறுபான்மை பிரதிநிதிகளின் ஆசனங்கள் பறிபோகும் நிலை’

Editorial   / 2020 ஜூன் 28 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.புவியரசன்

பதுளை மாவட்டத்திலுள்ள  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 9ஆசனங்களையும், பெரும்பான்மை சமூகத்துக்குத் தாரை வார்த்துக் கொடுக்க முடியாது என்றும் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படல் வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளர் ​அ. அரவிந்தகுமார் தெரிவித்தார்.

பதுளையில் புத்திஜீவிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர், பதுளை மாவட்டத்தின் ​மொத்த சனத்தொகையில், 23 சதவீதமானவர்கள், தமிழ் பேசும் மக்களாகவும் 8 சதவீதமானோர், முஸ்லிம் மக்களாகவும் உள்ளனர் என்று தெரிவித்தார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், 8 ஆசனங்கள் வழங்கப்பட்டு அதில் இரண்டு ஆசனங்கள் மாத்திரமே சிறுபான்மை பிரதிநிதிகளுக்குக் கிடைத்தது என்றும் இம்முறை மொத்தம் 9 ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 31 சதவீதமான சிறுபான்மை வாக்காளர்கள் மாத்திரமே உள்ளதால், கடந்த காலத்தைப் போன்று, ஆசனங்களைத் தக்க வைத்துக்கொள்ளமுடியுமா என்ற சந்தேகமும் பயமும் ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.

காரணம் இம்முறை பதுளை மாவட்டத்தில், தேசியக் கட்சிகள் சார்பாகவும் சுயேட்சைக் குழுக்கள் சார்பாகவும் அதிகளவு தமிழ் பேசும் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர் என்றும் இதனால், வாக்குகள் சிதறடிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அரசியல் பேசுவது, தத்தமது ஜனநாயக உரிமையாக இருந்தாலும் தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் நோக்கில், ஒப்பந்தங்களின் அடிப்படையில், பெரும்பான்மை அரசியல் சக்திகளின் பின்புலம், தூண்டுதலின் பேரில், பலர் இம்முறை களமிறங்கியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இதனால், சிறுபான்மை சமூகத்தில் இருந்து போட்டியிடும் வெற்றிபெறும் வேட்பாளர்களின் வெற்றி பெறும் வாய்ப்பு பறிபோகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் எனவே, இது குறித்து மாவட்டத்திலுள்ள தமிழ் பேசும் சிறுபான்மை வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .