2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சிறுபான்மையினரின் ஒற்றுமையே ‘தோல்விக்குக் காரணம்’

Editorial   / 2018 ஏப்ரல் 05 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பா. திருஞானம், டி. சங்கீதன்

 

சிறுபான்மையினரின் ஏகோபித்த ஒற்றுமையே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்தமைக்குக் காரணமாக அமைந்தது என, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர், ஊடகங்களுக்கு இன்று (05) விடுத்துள்ள அறிக்கையில், சிறுபான்மைக் கட்சியின் பங்களிப்புப் பற்றி, அலசப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “இந்த வாக்களிப்பு மூலம், நம்பிக்கையில்லாப் பிரேரணையின் தோல்விக்குக் காரணமாக, இந்த நாட்டின் சிறுபான்மையின மக்கள் இருந்துள்ளனர். குறிப்பாக, சிறுபான்மைக் கட்சிகளான மலையத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முற்போக்குக் கூட்டணி, வட- கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி, முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து வாக்களித்துள்ளன.

“மேலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இதையும், நம்பிக்கையில்லாப் பேரரணைக்கு ஆதரவாகக் கருதுகின்றேன். ஒட்டுமொத்தத்தில் இலங்கையின் சிறுபான்மைக்கட்சிகள் யாவும் ஒற்றுமையாக இணைந்து செயற்பட்டடுள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுபான்மைக் கட்சிகள் இணைந்து செயற்பட்டு, பிரேரணைக்குத் தோல்வி கிடைத்துள்ள நிலையில், இதை உணர்ந்து எதிர்காலத்தில் செயற்பட்டு, சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்துத் தீர்வுகான வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

அத்தோடு, நாட்டில் எந்தவோர் அரசாங்கமும் தனது ஆட்சியை அமைப்பதற்கோ அல்லது தக்க வைப்பதற்கோ, சிறுபான்மை மக்களின் ஆதரவு, நிச்சயமாகத் தேவை என்பதை, இவ்வாக்கெடுப்பு உணர்த்துகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர், “இந்த நாட்டுக்கு, குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியே சிறந்தது. இவரின் ஆட்சிக் காலத்திலேயே, சிறுபான்மை மக்களுக்கு நன்மை கிடைக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .