2024 மார்ச் 28, வியாழக்கிழமை

’சிறைக் கைதிகளுக்கும் வாக்களிக்க வாய்ப்பு வழங்குக’

மொஹொமட் ஆஸிக்   / 2020 ஜனவரி 29 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிறைக் கைதிகளுக்கும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கும் படி 'கெபே' அமைப்பும் இலங்கை மனித உரிமைகள் மத்திய நிலையமும் கோரியுள்ளன.

இது தொடர்பாக இன்று (29​) விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மேற்படி விடயம் தொடர்பாக, தமது அமைப்பு, தேர்தல் ஆணையாளருக்கும் மனித உரிமை ஆணைக்குழு என்பவற்றுக்கும் கடிதங்கள் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளன என்றும் இக்கடிதம், கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹ்மட் மனாஸ், மனித உரிமைகள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பானர் சுரங்கி ஆரியவன்ச ஆகியோரின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்ற ஒரு காரணத்துக்காக மாத்திரம், ஒருவரது வாக்குரிமையை இல்லாதொழிக்க முடியாது என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு வாக்குரிமை வழங்கப்படாதமை, பாரிய மனித உரிமை மீறல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் பல நாடுகளில், சிறைக் கைதிகளுக்கு வாக்களிப்பது தொடர்பாக  ஒழுங்கு முறைகள் பின்பற்றப்படுவதாகவும் அவ்வாறான ஒரு முறை, எமது நாட்டிலும் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் கோரப்பட்டள்ளது.

இலங்கையில் சுமார் 25,000 கைதிகள் இருப்பதாகவும் அவர்களது வாக்களிக்கும் உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், எதிர்வரும் காலத்தில், சிறைச்சாலைக்கு உள்ளேயே, வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படுவது நல்லது என்றும் அதில் கோரப்பட்டுளளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X