2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சிலை சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

டி. ஷங்கீதன்   / 2019 செப்டெம்பர் 20 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் ஸ்டெதர்ன் தோட்டத்தில், அண்மையில் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்ட அமரர் பெ.சந்திரசேகரனின் சிலை தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு, அவரது புதல்வியும் மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர்நாயகம் சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

குறித்த சிலையில் காணப்படும் முகமானது, அமரர் பெ.சந்திரசேகரினுடையது அல்ல என்று பல்வேறு தரப்பினராலும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள  அனுஷா,  தனது தந்தையாரும் மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத் தலைவருமாகிய பெ. சந்திரசேகரனுக்கு, சிலை வைப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள், அது தொடர்பான நிகழ்வுகள் அனைத்தையும் தான் கௌரவப்படுத்துவதாகத் தெரிவித்தார்.

சிலையின் முகம் தந்தையைப்போன்றதல்ல என்பது மட்டுமே, தனக்குக் கூறப்பட்டதாகவும் அதை தவிர அவரது அடையாளத்துக்கான சகல முயற்சிகளும் பாராட்டுக்குறியதே என்றும் தெரிவித்தார்.

சிலை தொடர்பில் எழுப்பப்படும் கருத்துகள், இந்த முயற்சியை அர்த்தமற்ற சிக்கலாக்கிவிடக்கூடாது என்பது, தனது விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஏதாவது வகையில் தனது தந்தையின் அடையாளங்களைக் காப்பாற்றி வளர்ப்பதற்கு எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தனது ஆதரவு நிச்சயம் தொடரும் என்றும் சிலை தொடர்பிலான சிக்கலான விமர்சனங்களும் முற்றுப்பெறுவதையே தான் விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .