2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிவனொளிபாத மலைக்கு யாத்திரிகள் படையெடுப்பு

Editorial   / 2017 டிசெம்பர் 24 , பி.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால், கடந்த இரு தினங்களில், சிவனொளிபாத மலைக்கு வரும் யாத்திரிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக, நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிறி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

யாத்திரிகர்களில் அநேகமானோர் இளைஞர்களெனவும் இவர்களில் மூவர் போதைப் பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனரென்றும் அவர் கூறினார்.

மேற்படி மூவருக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் போதைப் பொருட்களுடன் சிவனொளிபாத மலைக்குச் செல்வோரை கைதுசெய்வதற்காக பொலிஸார் விசேட செயற்றிட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறானவர்களை கைதுசெய்வதற்காக பொலிஸார்,  சிவில் பொலிஸார், பகலிரவு வேளைகளில், கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனரென்றும் அவர் கூறினார்.

சிவனொளிபாதமலை வளாகத்தில் போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்படுவோருக்கு எதிராகக் கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதால், போதைப் பொருட்களுடன் சிவனொளிபாதமலைக்குச் செல்வதைத்  தவிர்த்துக்கொள்ளுமாறும் பொலிஸார், யாத்திரிகர்களிடம் கோரியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X