2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சிவபூமியின் யாத்திரைப் பருவகாலம் டிசெ.3இல் ஆரம்பம்

Editorial   / 2017 ஒக்டோபர் 11 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், காமினி பண்டார,எஸ்.கணேசன்

2017/2018ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாத மலை பருவகால யாத்திரை, எதிர்வரும் டிசெம்பர் 3ஆம் திகதி பௌர்ணமி தினத்துடன் ஆரம்பமாகவுள்ளதென, சிவனொளிபாத மலை நாயக்க தேரர் பிங்கமுவு தம்மதின்ன, நேற்றுத் தெரிவித்தார்.

சிவனொளிபாதமலையின் பருவகால யாத்திரையை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல், நல்லத்தண்ணி கிராமசேவகர் காரியாலயத்தில், நேற்று நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்படி அறிவித்தலை விடுத்தார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர், “இவ்வருடத்துக்கான சிவனொளிபாதமலை யாத்திரைப் பருவக்காலத்தை ஆரம்பிக்கும் முகமாக, இரத்தினபுரி, பெல்மதுளை, கல்பொத்தாவெல ரஜமஹா விகாரையில் வைக்கப்பட்டுள்ள சமன்தேவ விக்கிரகம், புனித கலசம், ஆபரணங்கள் தாங்கிய இரத பவனி, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 2ஆம் திகதி, சுபவேளையில புறப்பட்டு பெல்மதுளை, இரத்தினபுரி, கிதுல்கல, கினிகத்தேனை, வட்டவளை, ஹட்டன், நோர்வூட், மஸ்கெலியா, நல்லத்தண்ணி வழியாக சிவனொளிபாதமலையின் அடிவாரத்தை வந்தடையவுள்ளது.

“இம்முறையும் 3 வீதிகளின் ஊடாக ஊர்வலம் பயணிக்கவுள்ளது. அந்தவகையில் இரத்தினபுரி - அவிசாவளை வீதியில் ஊர்வலம் பயணித்து ஹட்டன் - நல்லதண்ணி ஊடாக சிவனொளிபாதமலைக்கு ஒரு ஊர்வலம் பயணிக்கவுள்ளது. மற்றைய ஊர்வலம் இரத்தினபுரி - பலாபத்தல வீதி ஊடாக பயணிக்கவுள்ளது.

“தெய்வீக ஆபரணங்களை ஏந்திய மூன்றாவது ஊர்வலம் பெல்மடுல்ல - ஓப்பநாயக்க, பலங்கொட, பின்னவல, பொகவந்தலாவை ஊடாக சிவனொளிபாதமலையை அடையவுள்ளது.

“அத்துடன், சமன்தேவ விக்கிரமும் பூஜைப்பொருட்களும் மலை உச்சிக்குக் கொண்டுசெல்லப்பட்டு பிரதிட்டை செய்யப்பட்டதன் பின்னர், டிசெம்பர் 3 ஆம் திகதி அதிகாலை நடைபெறவுள்ள விசேட பூஜைகளைத் தொடர்ந்து 2017 – 2018ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைப் பருவக்காலம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

“சிவனொலிபாத மலை பருவகால யாத்திரை காலப்பகுதியில் பொலித்தீன், பிளாஸ்டிக் மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .