2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

சிவபூமியில் ‘கோரா’ கோரத்தாண்டவம் 35 பேர் சிக்கினர்

Editorial   / 2018 ஜனவரி 29 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேரளா கஞ்சாவுடன் சிவனொளிபாதமலை யாத்திரையில் ஈடுபட்ட 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.  ​

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் தியகல பிரதேசத்தில், நேற்று முன்தினம் சனிக்கிழமை (27), கோரா என்ற பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன், பொலிஸ் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.   

​சிவனொளிபாத மலைக்கான யாத்திரையில் ஈடுபடும்போது, போதைப்பொருளைக் கொண்டுசெல்ல வேண்டாம் என்றும் போதைப்பொருள் மற்றும் மதுபானப் பாவனையில் ஈடுபட வேண்டாமென்றும், பாதுகாப்புத் தரப்பினரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.   

இருப்பினும், பெரும்பாலானவர்கள் மிகவும் சூட்சுமமான முறையில் வாகனங்களிலும் தமது சரீரத்திலும் மறைத்து, போதைப்பொருட்கள் மற்றும் மதுபானங்களை எடுத்துச் செல்கின்றனர்.   

இவ்வாறு எடுத்துச் செல்லப்பட்ட போதைப்பொட்கள் மறைக்கப்பட்டுள்ள இடங்களைக் கண்டுபிடிப்பதற்காகவே, பொலிஸ் மோப்ப நாய்களின் உதவிகள் நாடப்பட்டுள்ளன.  

இந்நிலையிலேயே, போதைப்பொருளுடன் யாத்திரையில் ஈடுபட முயன்ற 35​பேர், நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த பொலிஸார், அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களென, விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.   

இவர்கள் அனைவரையும், ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .