2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சீரற்ற வானிலையால் மரக்கறி தோட்டங்கள் சீரழிந்தன

கு. புஷ்பராஜ்   / 2019 ஓகஸ்ட் 16 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலையகத்தில் தொடர்ந்து நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக, சிறு தோட்ட விவசாயிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விவசாயக் காணிகளில் பயிரிடப்பட்டுள்ள மரக்கறி வகைகள் அனைத்தும், வெள்ள நீரிவில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவம் இதனால், இம்முறை தங்களுக்கு கிடைக்கவேண்டியிருந்த வருமானம் இல்லாமல் போய்விட்டது என்றும், விவசாயிகள் தெரிவித்தனர்.

கரட், உருளைக் கிழங்கு, லீக்ஸ், கோவா, போஞ்சி உள்ளிட்ட மரக்கறி வகைகளை உற்பத்தி செய்வதற்கு, அதிகளவு பணம் செலவு செய்யப்பட்டபோதிலும், எதிர்பாராத விதமாக, தற்போது நட்டத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.

எனவே, இவ்வாறு ​நட்டத்தை எதிர்நோக்கியுள்ள விவசாகளுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்க, அதிகாரிகள் முன்வரவேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .