2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘சு.கவும் பெரமுனவும் இணைந்தால் 65 இலட்சம் வாக்குகளை பெற்று வெற்றியீட்டலாம்’

மொஹொமட் ஆஸிக்   / 2019 மார்ச் 18 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து செயற்பட்டால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், 65 இலட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றியீட்டுவது மிகவும் இலகுவான காரியமென, சு.கவின் பொதுச் செயலாளரும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.  

சு.கவின் கண்டி மாவட்டக் கட்சிக் கிளைகளைப் புனரமைக்கும் நடவடிக்கை, கண்டியிலுள்ள மத்திய மாகாண முதலமைச்சின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், நேற்று முன்தினம் (16) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

அங்கு தொடர்ந்துரைத்த அவர், ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை சில கட்சிகள் இன்னும் அறிவிக்காத நிலையில், தமது கட்சி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் வேட்பாளராக, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையே களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.  

தேர்தல்களையொட்டி, பாரிய கூட்டணியொன்றை அமைக்கவுள்ள அதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சக்திமிக்கதாக்கி வருவதாகவும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற, குறைந்தது 65 இலட்சம் வாக்குகளையாவது பெறவேண்டும் எனவும் சுட்டிக்காட்டிய தயாசிறி எம்.பி, அதற்காக, சு.கவும் பொதுஜன பெரமுனவும் இணைந்த பரந்த கூட்ட​ணியொன்று உருவாக்கப்படும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .