2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சுகாதார ஊழியர்கள் 21 பேர் தாய்லாந்துக்கு பயணம்

Kogilavani   / 2017 ஒக்டோபர் 10 , பி.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித்த ஆரியவங்ச

ஊவா மாகாண சபையின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் திண்மக்கழிவு முகாமைத்துவ ஆய்வுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தலைமையில் இவர்கள் தாய்லாந்துக்கு அழைத்து செல்லப்படவுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று(10) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

ஊவா மாகாண சபையின் கீழ் பணியாற்றும் சுகாதார ஊழியர்கள் 21 பேரும், குப்பைகளை அகற்றும் வண்டிகளின் சாரதிகள் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்டோர் குறித்த சுற்றுலாவில் பங்கேற்கவுள்ளனர் என ஊவா மாகாண அமைச்சின் செயலாளர் சந்தியா அபன்வல தெரிவித்தார்.

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் ஆலோசனைக்கமைய, கழிவகற்றல் துறையுடன் தொடர்புபட்ட ஊழியர்கள் இவ்வாறு கழிவு முகாமைத்துவ ஆய்வு சுற்றுலாவிற்காக, முதல் தடவையாக அழைத்துசெல்லப்படவுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஊவா மாகாண சபையின் கீழ் உள்ள 28 நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களிடையே, தெரிவு செய்யப்பட்ட
ஊ​ழியர்கள் இதில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .