2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சுட்டெரிக்கும் வெப்பத்தால் நோய்கள் பரவும் அபாயம்

Editorial   / 2019 ஏப்ரல் 08 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ்.சதீஸ், எஸ்.கிருஸ்ணா

 

மலையகத்தில் நிலவிவரும் அதிக வெப்பமான வானிலை காரணமாக, நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பாக பொகவந்தலாவ பிரதேசத்துக்கு உட்பட்ட பகுதிகளில், வயிற்றோட்டம், வாந்தி காரணமாக, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் பொகவந்தலாவ பிரதேச வைத்திய அதிகாரி ஏ.எஸ்.கே.ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

குறித்த நோய்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களும் பெரியோர்களும் வைத்தியசாலைக்கு வருகை தந்து சிகிச்சை பெற்றுச் செல்வதோடு, வைத்தியசாலையில் தொடர்ந்தும் தங்கிச் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார். 

கொதித்து ஆறிய நீரைப் பருகுமாறும் மலசலகூடத்துக்குச் சென்று வந்த பிறகு, சவர்க்காரமிட்டு இரண்டு கைகளையும் நன்றாகக் கழுவுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.  

 மேலும் நீர் அருந்தும் அளவை அதிகரித்துக்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .