2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

செயலமர்வு...

Editorial   / 2018 ஜூலை 25 , பி.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

கோதுமை மாவில் எத்தகைய உணவுப் பொருட்களைத் தயாரிக்க முடியும் என்பது தொடர்பில், ஹட்டன் பிரதேசத்துக்கு உட்பட்ட வெதுப்பக உரிமையாளர்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் தெளிவுபடுத்தும் செயலமர்வு, மத்திய மாகாண வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், ஹட்டன் ரேல்வே ஹோட்டலில், இன்று (25) நடைபெற்றது.

நுகர்வோர் அதிகாரசபையின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, வெதுப்பகங்களில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் நிறையளவு பேணப்பட வேண்டும் என்பது தொடர்பிலும், இதன்போது வலியுறுத்தப்பட்டது.

மேலும், வெதுப்பக உணவுத் தயாரிப்பில் சுத்தம் பேணப்படுதல் வேண்டும் என்பது தொடர்பிலும், வெதுப்பக உரிமையாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டது.

பாடசாலை மாணவர்களுக்குப் பயன்படும் வகையில், கோதுமை மாவில் எத்தகைய உணவுப்பண்டங்களைத் தயாரிக்க முடியும் என்பது தொடர்பில், வீடியோக்கள் மூலமாகவும் செயன்முறையின் மூலமும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்தச் செயலமர்வில், ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட நான்கு பாடசாலைகளிலிருந்து தெரிவுசெய்து அனுப்பப்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X