2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சேவலை மடக்க யானை முயற்சி

Editorial   / 2019 செப்டெம்பர் 23 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆளும் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் இழுப்பறியான நிலைமை தொடர்ந்துள்ளதையடுத்து, தமது பங்காளிகளைத் தவிர, ஏனைய சிறுகட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவை திரட்டிக்கொள்ளும் வியூகமொன்றை ஐக்கிய தேசியக் கட்சி வகுத்துள்ளதென அறியமுடிகின்றது.

அரசாங்கத்துக்குள் அங்கம் வகிக்கும் சிறுக் கட்சிகள், சிறுபான்மை கட்சிகளை தவிர, அரசாங்கத்துக்கு வெளியிலும், எதிரணியிலும் இருக்கும் சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளுடன், சந்திப்புகளை மேற்கொள்வதற்கான அழைப்புகளை, ஐக்கிய ​தேசியக் கட்சி விடுத்துவருகின்றது.

அதற்கு முதற்கட்டமாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸூடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி, தூது அனுப்பியிருந்தது.

இதற்கான ஏற்பாடுகள், கடந்த வௌ்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டிருந்த எனினும், காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் நாட்டில் இல்லாமையினால், அந்த சந்திப்பு தவிர்க்கப்பட்டதாக அறியமுடிகின்றது.

எந்தத் தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயாராக இருக்கின்ற நிலையில், பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, மூவரடங்கிய குழுவொன்றையும் ஏற்கெனவே, நியமித்துள்ளது.

அந்தக் குழுவில், மத்திய மாகாண முன்னாள் உறுப்பினர்களான மருதபாண்டி ரமேஷ்வரன், பழனி சக்திவேல், கணபதி கணகராஜ் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து யார் அழைப்பு விடுத்துள்ளனரென்ற தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தரப்பினரே, அழைத்துள்ளரென அறியமுடிகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி அழைப்பு விடுத்திருந்த போது, தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு ஆறுமுகன் தொண்டமான், இந்தியாவுகுச் சென்றிருந்தார்.

நேற்று (22) நாடு திரும்பிய அவர், ​கொட்டகலை தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் தங்கியுள்ளார். அங்கு சென்றிருந்த இ.தொ.கா, தூதுக்குழு, அழைப்புகள் தொடர்பில் விரிவாக எடுத்துரைத்துள்ளது. அத்துடன், இ.​தொ.கா., மந்திராலோசனைகளையும் நடத்தி வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .