2024 மார்ச் 28, வியாழக்கிழமை

சோபையிழந்த தீபாவளி

Kogilavani   / 2017 ஒக்டோபர் 18 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஸ்பராஜா

தீபாவளி பண்டிகையை இம்முறை மிகுந்த ஏமாற்றத்துடனேயே கொண்டாடியதாக, பெருந்தோட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தீபாவளி முற்பணமாக 10,000 ரூபாய் வழங்குமாறு தோட்ட நிர்வாகங்களை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கோரியிருந்தது.

எனினும், இந்த முற்பணம் சில தோட்டங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டதாகவும் பெரும்பாலான தோட்டங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த மாதம் முழுவதும் மழை காலம் என்பதால் வேலைநாட்கள் குறைக்கப்பட்டனவெனவும் அதனால், இம்மாதம் போதிய சம்பளத்தைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தீபாவளியைக் கொண்டாடுவதற்கு, தீபாவளி முற்பணத்தையே தாம் நம்பியிருந்ததாகவும் ஆனால், தோட்ட நிருவாகங்கள், தீபாவளி முற்பணத்தை வழங்காது தம்மை ஏமாற்றிவிட்டதாகவும் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த வருடம் தீபாவளி முற்பணமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி, பல ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டதன் பின்னரே, தோட்ட நிருவாகம் முதற்கட்டமாக 6,500 ரூபாயையும் இரண்டாம் கட்டமாக 3,500 ரூபாயையும் வழங்கியது. மலையக அரசியல்வாதிகள், தோட்ட நிர்வாகங்களுக்குக் கொடுத்த அழுத்தங்களும் இதற்கொரு காரணமாகும். எனினும், இந்த வருடம் மலையக பிரதிநிதிகள், தீபாவளி முற்பணத்தைப் பெற்றுக்கொடுப்பதற்குத் தவறிவிட்டனர் என, தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

கடந்த வருடம் வழங்கப்பட்ட 10 ஆயிரம் ரூபாய் முற்பணத்தை, இவ்வருடமும் பெற்றுக்கொடுக்க முடியாத அளவுக்கு, மலையகத் தலைமைகள் பொறுப்பற்றுச் செயற்படுவது வேதனையளிக்கிறது என்றும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X