2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜனாதிபதிக்கான வரவு-செலவுதிட்டம்: ‘தோற்கடிக்கவேண்டும் என்பதை ஏற்கமாட்டேன்’

Editorial   / 2019 மார்ச் 05 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன் 

ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு சில பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியின் செலவீனங்களுக்கான வரவு-செலவுத்திட்டத்துக்கு எதிராக வாக்களித்து, அதைத் தோற்கடிக்கவேண்டும் என்று கூறுவதை, தான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டத்தின் கீழ், தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆரம்பப் பிரிவுக்கான கற்றல் வள நிலையக் கட்டடம், நேற்று முன்தினம் (03) திறந்து வைக்கப்பட்டது.  

இந்தக் கட்டடம், 15 மில்லியன் ருபாய் நிதியொதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,  

கடந்த காலத்தில் ஜனாதிபதியாக இருந்தவர்கள், தங்களது செலவீனங்களுக்காக, மில்லியன் கணக்கில் நிதியொதுக்கீடு செய்துகொண்டாலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவ்வாறு செய்யவில்லை என்று அவர் கூறினார்.  

இவ்வாறு, ஜனாதிபதியின் செலவீனங்களுக்கான வரவு - செலவுத்திட்டத்தை, நாடாளுமன்றத்தில் தோற்கடிப்பதன் மூலம், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்படு​மே தவிர, இதனால், நாட்டுக்குப் பாதகமான சம்பவங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார்.  

எது எவ்வாறாயினும், நாட்டின் நன்மையைக் கருத்தில் கொண்டு அனைவரும் செயற்படவேண்டும் என்றும் ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றாகப் பயணித்தால் மாத்திரமே, நாட்டின் அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .