2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

டெங்குத் தொற்றின் தாக்கம் அதிகரிப்பு

Kogilavani   / 2017 டிசெம்பர் 18 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

மத்திய மாகாணத்தில் கடந்த காலங்களிலும் பார்க்க இவ்வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதென, சுகாதார அமைச்சின் தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், மத்திய மாகாண சுகாதார சேவைகள் பனிப்பாளர் வைத்தியர் திருமதி சாந்தி சமரசிங்கவிடம் வினவியபோது,

“இவ்வாண்டு இதுவரையான காலப்பகுதியில், மத்திய மாகாணத்தில் 17,750 டெங்கு நோயளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்பதுடன் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

“கண்டி மாவட்டத்தில் 13,839 நோயாளர்களும் மாத்தளை மாவட்டத்தில் 3,039 நுவரெலியா மாவட்டத்தில் 872 நோயாளர்களும் பதிவாகி உள்ளனர்.

“கடந்த வருடங்களில் மத்திய மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கட்டுப்பாட்டில் இருந்த போதும், இவ்வாண்டு நாடு முழுவதிலும் ஏற்பட்ட நிலைமைக்கு ஏற்றவாரு மத்திய மாகாணத்திலும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவியது.

“2018 ஆம் ஆண்டில், மத்திய மாகாணத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக எவ்வித உயிரிழப்பும் ஏற்படாத வகையிலும் நோயாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கும் விசேடத் திட்டமொன்று, அமுல்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் இந்தத் திட்டம் வெற்றியடைவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம்” என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .