2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

டெங்குவைக் கட்டுப்படுத்த 100 பேர் கொண்ட செயலணி

Editorial   / 2020 ஜனவரி 02 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஏ.எம் பாயிஸ்

இரத்தினபுரி மாவட்டத்தில், மிக வேகமாக பரவி வரும் டெங்குத் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு, ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் 100 பேரை கொண்ட தொண்டர் செயலணி, நியமிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சல் தீவிரமடைந்த வருவதாகவும் எனவே, டெங்குத் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்குத்    தேவையன சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் சுகாதார, சுதேச வைத்திய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி  பணிப்புரை விடுத்துள்ளார்.

இவ்விடயமாக கடந்த வாரம் நடைபெற்ற இரத்தினபுரி மாவட்ட அபிவிருத்தி குழுக்  கூட்டத்தின் போது அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இதற்காக ஒவ்வொரு பொதுச் சுகாதார பிரிவின் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களின் தலைமையில் பணியாற்றுவதற்காக, 100 பேர் தொண்டர் செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செயலணி, டெங்குத் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும் என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .