2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

டொரிங்டனில் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 ஏப்ரல் 05 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன்

அக்கரப்பத்தனை -  டொரிங்டன் தோட்ட அதிகாரியை இடமாற்றம் செய்யக்கோரி, அப்பகுதித் தோட்டத் தொழிலாளர்கள் இன்று (05) பிற்பகல் 12 மணியளவில் டயகம - ஹட்டன் பிரதான வீதியின் டொரிங்டன் - அயோனா சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், சுமார் 500க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

குறித்த தோட்டத் தொழிலாளர்கள் கடந்த ஒரு வாரகாலமாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்ட வந்த நிலையிலேயே, இன்று (05) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த தோட்டத்தின் முகாமையாளர் தோட்டத் தொழிலாளர்களுக்கு உரித்துடைய எந்த சலுகைகளையும் செய்து கொடுக்காது, தொழிலாளர்களிடம் இருந்து வேலையை மாத்திரம் பெற்றுக்கொள்வதாகவும், தேயிலை மலைகளை முறையாக பராமரிக்காததன் காரணமாக, தேயிலை மலைகள் காடாகி வருவதாகவும், தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக எவ்வித செவிமடுத்தளுமின்றி செயற்படுவதாகவும் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டினர்.

குறித்த தோட்டத்தில், அண்மையில் தொழிலாளி ஒருவர் தனக்கு வேலை வழங்காததன் காரணமாக, தற்கொலை செய்ய முயற்சி செய்த போது, அவரை ஏனைய தொழிலாளர்கள் காப்பாற்றி, அவருக்கு நீதி வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .