2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘தோட்டங்களுக்கு வியாபாரிகள் வருவதைத் தடுக்கவும்’

Gavitha   / 2020 டிசெம்பர் 04 , பி.ப. 02:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியா பிரதேசத்துக்குட்பட்ட தோட்டப் பகுதிகளில், வியாபார நோக்கத்துடன் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த வியாபாரிகள் உள்நுழைவதாகவும் இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நுவரெலியா பிரதேசசபையின் உறுப்பினர் கே.ராதிகா, சபைத் தவிசாளர் வேலு யோகராஜின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளார்.

நுவரெலியா பிரதேச சபையின் 33ஆவது மாதாந்த சபை அமர்வு, நேற்று (03) நானு-ஓயாவில் நடைபெற்றது.

தவிசாளர் வேலு யோகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த சபை அமர்வில், இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோட்டப் பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், தோட்டப்பகுதிகளுக்கு வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், வியாபார நோக்கத்துக்காக வருவதாகவும் இதைத் தடுக்கும் பொறுப்பு, பெருந்தோட்ட நிர்வாகத்துக்கே இருப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

தோட்டப்பகுதிகளுக்கு, ஆடை வியாபாரிகள், தளவாட வியாபாரிகள் என பலர் வருகை தருவதாகவும் எனவே, இது தொடர்பில் பிரதேச சபை கவனம் செலுத்தவேண்டும் என்றும் இதன்போது அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .