2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

“தண்டனையிலிருந்து தப்பிக்கக் கூடாது”

Editorial   / 2018 பெப்ரவரி 07 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிணை முறி மோசடியுடன் தொடர்புடையவர்களை, தண்டனையிலிருந்து தப்பிக்க அனுமதிக்கக் கூடாது என்றுத் தெரிவித்துள்ள மலையகத் தேசிய முன்னணி, மோசடியுடன் தொடர்புடைய நபர்கள் அனைவரும் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளது.

இதுத் தொடர்பில், மலையகத் தேசிய முன்னணியின் தலைவரும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தமிழ்ப் பிரிவு பொறுப்பாளருமான கலாநிதி ரிஷி செந்தில்ராஜ்  மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மிகப் பெரிய ஊழல் மோசடியாக மத்திய வங்கியின் பிணை முறி மோசடி கருதப்படுகின்றது, இந்த கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்” என்றார்.

அவர் மேலும், “எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை இலக்கு வைத்து மக்களுக்குப் பூச்சாண்டிக் காட்டும் நோக்கில் அர்ஜூன் அலோசியஸ், கசுன் பலிசேன உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுப் பின்னர் விடுதலை செய்யப்படுவதை அனுமதிக்க முடியாது.

“இந்தக் குற்றச் செயலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளையும் கண்டறிந்து, அவர்களைத் தண்டிக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உண்டு.

“வெறும் கண்துடைப்புக்காக கைதுகள் இடம்பெறுவதை, நாட்டுப்பற்றுடைய கட்சி என்ற வகையில் மலையகத் தேசிய முன்னணி அனுமதிக்காது.

“எதிர்கால சந்ததியினரின் நலனைக் கருத்திற்கொண்டு இந்த ஊழல் மோசடி தொடர்பில் கட்சி பேதமோ அல்லது வேறும் அரசியல் காரணிகளையோ முன்னிலைப்படுத்தாது, குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

“மேலும், திருடப்பட்ட மக்களின் பணம் மீளக் கையளிக்கப்பட வேண்டும், இந்த விடயத்தில், நல்லாட்சி அரசாங்கம் பின்னிற்கக் கூடாது” என்றும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .