2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தனி வீட்டுக்கு எதிராக குமுறுகிறார் குழந்தைவேல்

ஆ.ரமேஸ்   / 2019 ஏப்ரல் 08 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொகவந்தலாவ, கொட்டியாகலை, கெர்க்கசோல்ட் தோட்டங்களில், தனிவீட்டுத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் தரங்குறைந்தவை என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் கே.குழந்தைவேல் ரவி, அதற்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  

நுவரெலியாவில், சனிக்கிழமை (6) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர் மேலும் கூறுகையில், மலைநாட்டு புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் மூலம் நிர்மாணிக்கப்படும் தனி வீட்டுத்திட்டம், அலிபாபவும் 40 திருடர்களும் என்ற கொள்ளையர்களின் கதையை போலாகிவிட்டது என்று விமர்சித்தார். 

இதன் காரணமாக அவ்வீடுகளில் பயனாளிகள் குடிபுகுவதை புறக்கணித்துள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.  

பொகவந்தலாவ பிரதேசம், நோர்வூட் பிரதேசசபைக்கு உட்பட்டது என்பதால், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, பிரதேச சபையின் கடமை என்றும் தெரிவித்தார்.  

எனவே, கொட்டியாக்கலை, கெர்க்கசோல்ட் ஆகிய பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தரங்குறைந்த வீடுகள் தொடர்பில், நீதிமன்றத்தை நாடும் விடயத்தில் தான் பின்வாங்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .