2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தனிவீட்டுத் திட்டத்துக்கு ’பிரதேச சபையின் அனுமதி கோரவில்லை’

Editorial   / 2019 ஜூன் 28 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட பெருந்தோட்டப் பிரதேசங்களில், மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சினூடாக முன்னெடுக்கப்பட்டுவரும் தனிவீட்டுத் திட்டத்துக்கு,  பிரதேச சபைகளின் அனுமதி, இதுவரையில் பெற்றுக்கொள்ளப்படவில்லை என, பிரதேச சபை தவிசாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், இது குறித்து முழுமையான அறிக்கையைப் பெற்றுத் தருமாறு, நுவரெலியா மாவட்ட பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம் ஆகியவற்றின் கவனத்துக்கு, பிரதேச சபை தவிசாளர்கள் கொண்டு சென்றுள்ளனர்.

இது குறித்து, வலப்பனை, நோர்வூட், நுவரெலியா, கொத்மலை ஆகிய பிரதேச சபைகளின் தவிசாளர்களே, தற்போது கேள்வியெழுப்பியுள்ளனர்.

வீடுகள் கட்டப்படுவதற்கான இடங்கள், தோட்டப் பகுதியைக் கொண்டிருந்தாலும் அவை, பிரதேச சபைக்குள் உள்ளவாங்கப்பட்டவை என்றும் எனவே, அங்கு தனி வீடுகளை அமைக்கும் போது, பிரதேச சபையின் அனுமதியைப் பெற்றிருக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தமது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தோட்ட நிர்வாகங்களும் இது குறித்து அறிவிக்கவில்லை என்றும் இந்த வீட்டுத்திட்டத்துக்கு, பிரதேச சபை எப்போதும் தடையாக இருக்காது என்றாலும், அனுமதி பெற்றுக்கொள்ளாதமையால், இந்த வீடுகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுதல், குப்பை அகற்றுதல், குடிநீர்த் திட்டம், உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றுக்கு, பிரதேச சபை எவ்வாறு தனது சேவையை செய்யும் என்றும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

எனவே, பிரதேச சபையின் அனுமதியின்றி கட்டப்படும் வீடுகள் குறித்து, அமைச்சு தெளிவான அறிக்கையை, சபையின் கவனத்துக்குக் கொண்டு வரவேண்டும் என, பிரதேச சபை தவிசாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .