2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தம்புளை பொ.ம நிலையம் மூடப்பட்டதால் வீதிக்கு இறங்கிய விவசாயிகள்

Editorial   / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காஞ்சன குமார ஆரியதாச

தம்புளையிலுள்ள பொருளாதார மத்திய நிலையம், மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டுள்ள நிலையில், குறித்த மத்திய நிலையத்துக்கு, தமது விளைச்சல்களைக் கொண்டுவந்துள்ள விவசாயிகள், தம்புளையை அண்மித்த பிரதான வீதிகளில் வைத்துக்கொண்டு, தமது விளைச்சல்களை விற்பனை செய்யும் நடவடிக்கையை, இன்று (08) முன்னெடுத்திருந்தனர். 

குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை நேற்றைய தினம் திறப்பதான முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், மறு அறிவித்தல் வரை அதை மூடுவதாக, நேற்று (07) அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், நேற்றைய தினம் பொருளாதார மத்திய நிலையத்துக்குத் தமது விளைச்சல்களைக் கொண்டுவருவதற்காக, விவசாயிகள் தமது அறுவடைகளை ஏற்கெனவே மேற்கொண்டிருந்த நிலையிலே, மேற்படி அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, தமது விளைச்சல்களை, தம்புளை பிரதான வீதிகளில் வைத்துக்கொண்டு, வெளி மாவட்டங்களிலிருந்து வரும் வியாபாரிகளுக்கு, விவசாயிகள் விற்பனை செய்தனர்.

இதேவேளை, தம்புளை பொருளாதார மத்திய நிலையத்தின் கட்டுப்பாட்டுப் பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த மத்திய நிலையத்தின் 150 வியாபாரிகளைத் தொடர்பில் வைத்துக்கொண்டே, நாட்டின் அனைத்துப் பாகங்களுக்கும், பிரதேச செயலகங்கள் ஊடாக, விவசாயிகளின் விளைச்சல்கள் அனுப்பி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொ(அ)லைபேசி ஊடாகவோ அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ, மரக்கறிகளுக்கான கோரிக்கைகளை விட முடியுமென்றும் அந்தக் கோரிக்கைகளுக்கு ஏற்ற மரக்கறிகள், பிரதேச செயலகங்கள் ஊடாக அனுப்பி வைக்கப்படுமென்றும், தம்புளை பிரதேச செயலாளர் பியல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .