2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘தமிழரொருவர் மேயராகும் வாய்ப்பு உள்ளது’

Editorial   / 2018 ஜனவரி 23 , பி.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஸ்பராஜா  

“நுவரெலியா மாநகர சபையை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கைப்பற்றும் அதேவேளை, இந்தச் சபையின் ஆட்சி அதிகாரத்தைக் காங்கிரஸ் தக்கவைக்கும் பட்சத்தில், தமிழர் ஒருவரும் மேயராக வரக்கூடிய வாய்ப்பு உள்ளது” என்று, எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், நுவரெலியா வட்டாரம் இரண்டில் நுவரெலியா மாநகர சபைக்குப் போட்டியிடும் சட்டத்தரணி சிவன்ஜோதி யோகராஜா தெரிவித்தார்.  

நுவரெலியா மாநகர சபைத் தேர்தல் தொடர்பில், மக்களுக்குத் தெளிவுப்படுத்தும் கூட்டம், நுவரெலியா யுனிக்வீவ் வீதியில் இடம்பெற்றது.  

இதில் கலந்துகொண்டு விளக்கமளிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.  
இங்கு மேலும் கூறிய அவர்,   

“நுவரெலியா மாவட்டமானது,  வலப்பனை, ஹங்குராங்கெத்த, கொத்மலை, ஹம்பகமுவ, நுவரெலியா என ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளைக் கொண்ட அதிகளவான தமிழர்கள் வாழும் மாவட்டமாகும். ஆனால் நுவரெலியாவில் மாத்திரமே மாநகர சபை காணப்படுகின்றது. இந்த மாநகரசபையின் கட்டுப்பாட்டுப் பகுதிகள், நூற்றுக்கு 75 சதவீதம் தமிழ் பேசும் மக்களின் ஆதிக்கத்துக்கு கீழ்பட்டவையாகும். எனினும், கடந்த காலங்களில் பெரும்பான்மைக் கட்சிகளின் ஆட்சியில் இம்மாநகர சபையின் அதிகாரங்கள் காணப்பட்டன. இதனால், தமிழ் மக்களுடைய கோரிக்கைகள், அபிவிருத்திகள் எதிர்பார்த்தளவில் பூர்த்தி செய்யப்பட்டனவா என்பது கேள்விக்குறி.  
“ஒரு தருணத்தில் இம்மாநகர சபைக்குள் தமிழ் பிரதிநிதி ஒருவரைப் பதில் முதல்வராகக்கூட நியமிக்க முடியாத இக்கட்டான சூழ்நிலை காணப்பட்டது. ஆனால், இந்த நிலைமையை மாற்றியமைக்க, சிறந்த தமிழ் முதல்வரை நாம் தேர்ந்தெடுக்க நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தை மக்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .