2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘தமிழ் முற்போக்குக் கூட்டணி தேர்தலில் விழித்திருக்கும்’

Editorial   / 2019 ஏப்ரல் 19 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 ஸ்ரீ சண்முகநாதன் 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது, தமிழ் முற்போக்குக் கூட்டணி, கண்களை மூடிக்கொண்டு, ஆதரிக்காது எனத் தெரிவித்துள்ள தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டுப் புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம், மாறாக, சமூகத்துக்கு உண்மையான சேவைகளை வழங்கக்கூடிய ஒருவருக்கே தமது ஆதரவை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.  

தொழிலாளர் தேசிய சங்கத்தின் கொத்மலை, ஹங்குராங்கெத்த, நுவரெலியா பிரதேசத் தோட்டக் கமிட்டித் தலைவர்கள், மகளிர், இளைஞர் அணித் தலைவர்கள், அமைப்பாளர்களுக்கான விஷேட சந்திப்பு, நேற்று முன்தினம் (17), இறம்பொடை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. 

இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,  

மலையக மக்களின் தனி வீட்டுத் திட்டத்துக்கான தேவையும் அக்கறையும், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் கூறியதோடு, எல்லோருக்கும் வீடுகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.  

மே தினம் முடிவடைந்த பின்னர், இறம்பொடை பிரதேசத்திலுள்ள மக்களுக்கு, வீடமைப்புத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாகவும் பயனாளிகள் அனைவரும், வீடமைப்புத் திட்டம் வெற்றி பெற, தகுந்த ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை, தமிழ் முற்போக்குக் கூட்டணி, கண்களை மூடிக்கெண்டு ஆதரவளிக்காது என்றும் எந்தத் தேர்தல் நடைபெற்றாலும், அதற்கு முகங் கொடுக்கத் தாம் தயாராகவே உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .