2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

‘தரகர்கள் EPF,ETF நிதியை மோசடி செய்கின்றனர்’

Editorial   / 2019 ஜூலை 11 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ஸ

தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் நம்பிக்கை நிதியம், ஊழியர் சேமலாப நிதி ஆகியவற்றை தரகர்கள் மோசடி செய்வதாக,  அமைச்சரவை அந்தஸ்தற்ற தொழில், தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்தார்.

இந்த சேமலாப நிதியில் 25 சத வீத இலாபத்தை தமக்கு வழங்க வேண்டுமென, இந்த தரகர்கள் ஒப்பந்தம் செய்து, அவற்றைப் பெற்றுக்​கொள்ள உதவி செய்கின்றமை உறுதியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பதுனை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஏனைய துறைகளிலும் இந்த நிலைமைக் காணப்பட்டாலும், அதிகமாக இந்தj; தரகர்களால் பாதிக்கப்படுவது தோட்டத் தொழிலாளர்களே என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும். இது தொடர்பில் தோட்டத் தொழிலாளர்கள் ​தெளிவுப்படுத்தப்பட வேண்டும்.  தொழிலாளர்களை தெளிவுப்படுத்தும் பொறுப்பு ​தோட்ட முகாமையாளர்களிடமே காணப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .