2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தலவாக்கலை, ஹட்டன் பிரதேசங்களில் மினி சூறாவளி; 57 குடியிருப்புகள் சேதம்

Editorial   / 2018 பெப்ரவரி 28 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ்.சதிஸ், எஸ்.கணேசன், டி.சந்ரு,ஆர்.ரமேஸ், 

ஹட்டன், தலவாக்கலை ஆகியப் பிரதேசங்களில், நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட மினி சூறாவளியால், 57 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன எனத் தெரிவிக்கப்படுவதுடன் 50 குடும்பங்களைச் சேர்ந்த 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் உத்தியோகப்பற்றற்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் ஹட்டன் டிப்போவும் சேதமாகியுள்ளதென, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

தீடிரென ஏற்பட்ட மழையுடன் கூடிய சுழற் காற்றால், குடியிருப்புகளின் கூரைகள் அள்ளுண்டுச் சென்றுள்ளன.

தலவாக்கலை – கிரேட்வெஸ்டன் தோட்டம் லூசா, ஸ்கல்பா, மலைத்தோட்டம் ஆகியப் பிரிவுகளில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தது எனத் தெரிவிக்கும் பிரதேச மக்கள், மேற்படி பிரதேசங்களில், 50க்கும் மேற்பட்டத் தொழிலாளர் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன என்றும், வீடுகளில் வைக்கப்பட்டிருந்த  உபகரணங்களும் சேதமாகியுள்ளன என்றும்  தெரிவித்தனர்.

மினிசூறாவளியால் பாதிக்கப்பட்ட சுமார் 50  குடும்பங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர், தோட்டங்களிலுள்ள அவர்களது உறவினர்கள் மற்றும் அயலவர்களின் வீடுகளில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நிவாரண உதவிகளை, தோட்ட நிர்வாகம் வழங்கி வருகிறது.

மேலும் ஹட்டன் - டன்பார் பகுதியில் 6 வீடுகளின் கூரைத்தகரங்கள் பாதிப்படைந்துள்ளன என்பதுடன், ஹட்டன் காமினிபுர பகுதியில், குடியிருப்பென்றும் ஹட்டன் டிப்போவின்  கூரைத்தகரங்களும் காற்றால் அள்ளுண்டுச் செல்லப்பட்டு, அந்தப் பகுதியில் தரித்து நின்ற காரின் மீது விழுந்தமையால், கார் சேதமடைந்துள்ளது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .