2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தவலந்தென்ன ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா

Editorial   / 2019 ஏப்ரல் 19 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெய்யன்  

பன்வில-தவலந்தென்ன, ஹாகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்தத் தேர்த் திருவிழா, இன்று (19), வாஸ்து சாந்தி, கிராம சாந்தி, முகூர்த்தக் கல் நடுதல், கரகம் பாலித்தல் என்பவற்றுடன் ஆரம்பமாகி, தொடர்ந்து ஐந்து நாள்களாக நடைபெறவுள்ளது.  

20ஆம் திகதி பறவைக் காவடி ஊர்வலம் நடைபெற்ற பின்னர், தீ மிதிப்பு வைபவம் நடைபெற்று, மகேஸ்வரப் பூஜையுடன், அன்னதானம் வழங்கப்படும். 

21ஆம் திகதி காலை, ஸ்ரீ முத்துமாரியம்மனின் இரதப் பவனியும் பின்னர் மகேஸ்வரப் பூஜையுடன் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து, அம்மனுக்குப்பச்சை சாத்தும் நிகழ்வுகள் இடம்பெற்று, கரகம் வெளி வீதி வலமும் இடம்பெறும். 

22ஆம் திகதி, விசேடப் பூஜை நிகழ்வுகள் நடைபெற்று, மா விளக்குப் பூஜை நடைபெற்று, அடுத்த நாள் 23ஆம் திகதியன்று காலை 9 மணிக்கு, பால்குட பவனியும் மஞ்சள் நீராட்டு நிகழ்வும் இடம்பெற்று கரகம் ஆற்றில் குடிவிடும் நிகழ்வுகளுடன் விழா நிறைவடையவுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .