2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தானசாலைகளில் பரிசோதனை

Editorial   / 2018 ஜூன் 26 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரவீந்திர விராஜ்

பொசன் பௌர்ணமி தினத்தையொட்டி, மாத்தளை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அனைத்துத் தானசாலைகளையும், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளனரென, மாத்தளை நகரசபை மேயர் டல்ஜின் அளுவிஹார தெரிவித்தார்.

தானசாலைகள் நடத்தப்படும் இடங்களின் சுகாதார நிலை மற்றும் வழங்கப்படும் உணவுகள் மனித நுகர்வுக்குப் பொருத்தமானதாக உள்ளனவா என்பவை தொடர்பில், இதன்போது கவனஞ் செலுத்தப்படுமென்றும், அவர் மேலும் கூறினார்.

மாத்தளை மாவட்டத்தில், கடந்த மாதம் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக, குடிநீர் அசுத்தமானதுடன் சுற்றுப்புறச் சூழலும் பாதிக்கப்பட்டது. எனவே, இத்தகைய விடயங்களைக் கருத்திற்கொண்டே, தானசாலைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனவென, அவர் கூறினார்.

இந்தப் பரிசோதனைகளின் போது, மனித நுகர்வுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் தானசாலைகள் நடத்தப்படுவது உறுதி செய்யப்பட்டால், குறித்த தானசாலைகளுக்கு தடை விதிக்கப்படும் என்பதுடன், அவற்றுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், மாத்தளை நகர மேயர் டல்ஜின் அளுவிஹார மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .