2024 மார்ச் 28, வியாழக்கிழமை

தீபாவளியை முன்னிட்டு சுகாதார உத்தியோகஸ்தர்கள் திடீர் சோதனை

Editorial   / 2018 நவம்பர் 03 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

தீபாவளி தினங்களில் நுகர்வோருக்கு நல்ல பொருட்களைப் பெற்றுக்கொடுப்பதை நோக்கமாக கொண்டு, இன்று (03) காலை ஹட்டன் நகரில் நுவரெலியா மாவட்ட 40 பொது சுகாதார உத்தியோகஸ்த்தர்கள் 8 குழுக்களாகப் பிரிந்து திடீர் சோதனைகளை மேற்கொண்டனர்.

இதன்போது பல வியாபார நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பழுதடைந்த, மக்கள் பாவனைக்குதவாத பொருட்களை விற்பனை செய்த சிலருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

உணவகங்களில் சமைப்பவர்கள், பேக்கரி திண்பண்டங்கள் தயார் செய்பவர்கள் நன்கு சுத்தமாக உணவு வகைகளைத் தயாரிக்க வேண்டுமெனவும் உணவு தயாரிக்கும் போது, பாதுகாப்பு வழிமுறைகள் உரிய ஆடைகள் அணிய வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டன.

இவ்வாறு வலியுறுத்தப்பட்டவர்கள் அவ்வாறு செய்யாத பட்சத்தில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் தரமான பொருட்கள் பண்டிகை காலங்களில் விற்பனை செய்யாத வர்த்தகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொது சுகாதார உத்தியோகஸ்த்தர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

தீபாவளி முடியும் வரை இந்தச் சோதனை நடவடிக்கைகள் அடிக்கடி நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X