2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’தீர்வின்றேல் பணிப்பகிஷ்கரிப்பு தொடரும்’

Editorial   / 2019 செப்டெம்பர் 27 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரா.யோகேசன்

ஜனாதிபதியின் செயலாளர், உறுதியான தீர்வு தராதபட்சத்தில் தொடர்ந்து வரும் ஐந்து நாள்களுக்குப் பணிபகிஷ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.   

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 26ஆம் திகதி முதல் சுகவீன விடுமுறை அறிவித்து நாடு முழுவதும்  ஆசிரியர் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்தது.

அதன்படி நாம், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னர் எமது எதிர்ப்புகளையும் பல கோரிக்கைளையும் முன்வைத்து கவனயீர்ப்பில் ஈடுபட்டோம்.

தொடர்ந்து ஜனாதிபதி செலயகத்துக்கு முன்பாக, பேரணியாக  ஆசிரிய தொழிற்சங்கங்கங்களோடு நாம் சென்றிருந்த போதும் ஜனாபதி செயலகத்தில் ஜனாதிபதி செலாளருடன்  எமது பிரநிதிகள் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்துத் தருவதாக பொலிஸார் தெரிவித்திருந்த போதும், அனுமதிக்கபப்பட்ட சில பிரதிநிதிகள் மாத்திரமே, உதவி செயலாளரையே சந்திப்பதற்கான வாயப்புகள் கிடைத்து.

இதனால் பேச்சுவார்த்தை தோல்விடையந்தது என்று, இலங்கை ஆசிரிய சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

அத்தோடு இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் உறுதியான தீர்வு தாராத பட்சத்தில், தொடர்ந்து வரும் ஐந்து நாள்களுக்கு தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஆசிரிய அதிபர் தொழிசங்கங்களின் ஒன்றியம் அறிவித்ததன்படி 27 திகதியன்றும் மலையககத்தில் குறிப்பாக ஹட்டன், வட்டவளை, கினிகத்தேனை, பொகவந்தலாவ, நோர்வூட் போன்ற பிரதேசங்களைச் சூழவுள்ள பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X