2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

தெபட்டன் வீதிக்காக ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 ஏப்ரல் 28 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன், ஆ.ரமேஷ், மு.இராமச்சந்திரன், எஸ்.சதீஸ்

நோட்டன்பிரிட்ஜ், தெபட்டன் பிரதான வீதியை செப்பனிட்டு தருமாறு கோரி, அப்பகுதி மக்கள் இன்று (28) காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

10 வருடங்களுக்கும் மேலாக குன்றும் குழியுமாக காணப்படும் நோட்டன்பிரிட்ஜ் – மஸ்கெலியா பிரதான வீதியில் இருந்து பிரிந்து செல்லும் தெபட்டன் சந்தியிலிருந்து கொத்தலென்ன வரையிலான சுமார் 6 கிலோமீற்றர் கொண்ட பிரதான வீதி மக்கள் பாவனைக்கு உதவாத வகையில், குன்றும் குழியுமாகக் காட்சியளிக்கின்றது.

இவ்வீதியினூடாக பிரயாணங்களில், ஈடுபடும் ஆயிரக்கணக்கான மக்கள் சொல்லெண்ணா துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர். அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் விடுக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைவாக இப்பிரதான வீதியை செப்பனிட்டு தருமாறு கோரியே, இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க வேண்டாம் என நோட்டன்பிரிட்ஜ் பொலிஸாரால் நீதிமன்ற உத்தரவை பெற்றிருந்த போதிலும், மக்கள் இந்த உத்தரவுக்கமை மீறி, வீதியில் மருங்கில் இருந்து போராட்டத்தை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

கடந்த காலங்களில், தேர்தல் காலப்பகுதி ஒன்றில், இப்பகுதிக்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த அரசியல்வாதிகள் இப்பிரதான வீதியை செப்பனிடப்படும் எனவும் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் வாக்குறுதிகள் அளித்துள்ளனர்.

இருந்தபோதிலும், வீதியை செப்பனிடுவதற்கு நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற நம்பிக்கையில் இத்தனை காலமாக காத்திருந்த மக்களுக்கு விமோர்சனம் கிடைக்காதப் பட்சத்தில், வீதிக்கு இறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளதாக, ஆர்ப்பாட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

அத்தோடு, இவ்வீதியினூடாகப் பயணிக்கும் பாடசாலை மாணவர்கள் தொழிலுக்கு செல்போவர்கள் வைத்தியசாலை நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் அவசர பிரயாணங்களை மேற்கொள்பவர்களில் நிலைமையை கருத்திற்கொண்டு உடனடியாக இப்பிரதான வீதியை செப்பனிட காலம் தாழ்தாமல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X