2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’தேநீர் கடைகளை அமைக்க அரச நிறுவனங்கள் முன்வர வேண்டும்’’

Kogilavani   / 2017 நவம்பர் 19 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

“யாத்திரிகர்களின் நலன்கருதி நல்லதண்ணி நகர் முதல் சிவனொளிபாத மலை உச்சிவரை, தேநீர் கடைகளை அமைத்துக்கொடுக்க, அரச நிறுவனங்கள் முன்வர வேண்டுமென்று”, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவனொளி பாதமலைக்கு உரித்தான வனப்பகுதியில் செல்லும் வழியில் அமைக்கப்படவுள்ள தற்காலிக கடைகளுக்கு, வனப்பாதுகாப்புப் பிரிவினரால் இம்முறை விலை மனு கோரப்பட்டதுடன், சனிக்கிழமை விலைமனுக்கள் உடைக்கப்பட்டன.

“இதன்போது, வர்த்தக நிலையங்கள் அமைப்பதற்காக 14 இலட்சம் ரூபாய் முதல் 17 இலட்சம் ரூபாய் வரை, விலைமனுக்கள் கோரி, இடங்களையும் பெற்றுள்ளனர். இது கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் பாரிய தொகையாகும்.

“கடந்த காலங்களைவிட இம்முறை பன்மடங்கு விலை கோரி வாங்கியுள்ளதால் யாத்திரிகர்களுக்கு கட்டுப்பாட்டு விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுமா என்பது சந்தேகமே என்றும் பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, யாத்திரிகர்களின் நலன்கருதி நல்லதண்ணி நகர் முதல் சிவனொளிபாத மலை உச்சிவரை, தேநீர் கடைகளை அமைத்துக்கொடுக்க, அரச நிறுவனங்கள் முன்வர வேண்டுமென்று, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .