2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘தேயிலைத் தோட்டங்களை சுத்திகரித்ததன் பின்னர் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தவும்’

Editorial   / 2019 மே 17 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ், எஸ்.சதீஸ் 

குளவிக்கொட்டு, மிருகத் தாக்குதல் போன்றவற்றால் ஏற்படும் உயிராபத்துகளைத் தடுக்க, தேயிலைக் காணிகளைத் துப்புரவு செய்த பின்னரே, தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்படல் வேண்டும் என, இ.தொ.காவின் தலைவரும் எம்.பியுமான ஆறுமுகன் தொண்டமான், பெருந்தோட்ட முகாமைத்துவக் கம்பனிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.  

இது தொடர்பிலான கலந்துரையாடல்,  பொகவந்தலாவ கொட்டியாகல தோட்டக் காரியாலயத்தில், நேற்று முன்தினம் (15) இடம்பெற்றது. இதன்போதே, அவர் மேற்கண்டவாறு பணிப்புரை விடுத்துள்ளார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,  

மலையகப் பெருந்தோட்டங்களிலுள்ள தேயிலை மலைகள் காடாகக் காணப்படுவதனாலேயே, தோட்டத் தொழிலாளர்கள், இவ்வாறான உயிராபத்துகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என்றும் எனவே, தேயிலை மலைகள் சுத்திகரிக்கப்பட்டதன்  பின்னரே, தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படல் வேண்டும் என்றும் அவர் கூறினார்.  

இதன்போது, பொகவந்தலாவ பிளான்டேசன் பெருந்தோட்ட நிர்வாகத்துக்கு உட்பட்ட பொகவான தோட்டத்தில், குளவிக்கொட்டுக்கு இலக்காகிய பெண் தொழிலாளியொருவர் உயிரிழந்த சம்பவம் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது.  

குறித்த பெண்ணின் குடும்பத்துக்கும், பாதிக்கப்பட்ட ஏனைய தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகம் நட்டஈடு வழங்கவேண்டும் என்றும் இதன்போது அவர் பணிப்புரை விடுத்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .