2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

தேர்தலுக்குப் பின்னர் ‘மலையக அதிகார சபை உருவாகும்’

Editorial   / 2017 டிசெம்பர் 24 , பி.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

“உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தலுக்குப் பின்னர், மலையகத்துக்கென, மலையக அதிகார சபை ஒன்று உருவாகும். இந்த அதிகார சபையை, தமிழ் முற்போக்குக் கூட்டணியே உருவாக்கும்” என்று, மலைநாட்டு புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,

“தோட்டப்புறங்களிலிருந்து உள்ளூராட்சிமன்றங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள், தமிழ் முற்போக்குக் கூட்டணி, மலையகத்தில் இதுவரை செய்துள்ள அபிவிருத்திகளை முன்னிலைப்படுத்தி மக்களிடம் துணிவுடன் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

“நிச்சயமாக வாக்குகள் கிடைக்கும். அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தின் அனைத்து சபைகளையும் நாமே கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.

“கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது,  தமிழ் முற்போக்குக் கூட்டணி மீது நுவரெலியா மாவட்ட மக்கள் நம்பிக்கை வைத்து எவ்வாறு வாக்களித்தனரோ அதைவிட மேலதிக நம்பிக்கையுடன், இம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தலிலும் மலையக மக்கள் வாக்களிப்பார்கள்.

“மலையக பெருந்தோட்டப் பகுதி இளைஞர்கள், யுவதிகள், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள், வியாபாரிகள், முன்னாள் பிரதேசசபை மற்றும் நகர, மாநகரசபை உறுப்பினர்கள் என பலரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியுடன் இணைத்து தேர்தலில் போட்டியிடுகின்றார்கள்.

“இவர்கள் அனைவரும் நமது சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.  இவர்களை வெற்றிபெறச்செய்து மலையகத்தின் மாற்றத்துக்கான நாம் முன்னெடுத்துள்ள அபிவிருத்திப் பணிகளை மேலும் விருத்தியடைய செய்ய வேண்டும்.

“அதேவேளை, மலையகத்துக்கென தனியான அதிகார சபை ஒன்றை உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் பின்னர், தமிழ் முற்போக்குக் கூட்டணி உருவாக்கும். இதனூடாக பாரிய அபிவிருத்திகளை முன்னெடுப்பதுடன், தனிவீட்டுத் திட்டத்தை விருத்திச் செய்து, அனைவரும் தனக்கென சொந்தமான தனிவீட்டில் வாழும் நிலையை நிறைவேற்றுவோம்” என்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .