2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தேர்தல் வன்முறைகளைத் தடுக்க விசேட குழு களத்தில்

Editorial   / 2017 டிசெம்பர் 22 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.புவி  

பதுளை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்களிப்பு, 567 வாக்குச்சாவடிகளில் இடம்பெற உள்ளதோடு, தேர்தல் முறைகேடுகளை தடுத்து நிறுத்துவதற்காக மாவட்டத் தேர்தல் காரியாலயத்தின் விசேட குழு ஒன்று, கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக, மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இந்திக்க அத்துருசிங்க தெரிவித்தார்.   

பதுளை மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் நிமல் அபேசிறி தலைமையில், புதன்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,  

“புதிய தேர்தல் முறையின் கீழ் இடம்பெறும் முதலாவது தேர்தல் என்ற காரணத்தால், தலைமை தேர்தல் காரியாலயத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றி செயற்பட்டு வருகின்றோம். இம்முறை, வாக்குச் சாவடிகளே வாக்கெண்ணும் நிலையங்களாகவும் செயற்பட உள்ளன.   

“தேர்தல் முறைகேடுகள், தேர்தல் விதிகளை மீறும் செயற்பாடுகளில் ஈடுபடும் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் தொடர்பான காணொளிக் காட்சிகளையும் புகைப்படங்களையும் தந்துதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.   
“நாட்டின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், தேர்தலை நீதியாகவும் நேர்மையாகவும் நடத்த உறுதிப்பூண்டுள்ளோம். பொலிஸாரின் துணையுடன் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளை இறுக்கமாக்குவதுடன், மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பில் ஈடுபடுவதற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம்” என்றார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .